பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ராணுவ மேஜரும் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் தங்களுக்கென தனி நாடு வேண்டும் என பலூசிஸ்தான் விடுதலை படையினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், கடந்த மே மாதம் பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்திருந்தார். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும், பொதுமக்கள் செல்லும் வாகனங்கள் மீதும் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் கடந்த 12 மணி நேரத்தில் அவ்ரான், குவெட்டா, கலாத் ஆகிய மாவட்டங்களில் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ராணுவ மூத்த அதிகாரி மேஜர் ரபி நவாஸ் உள்பட 29 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
முதல்கட்டத் தகவலின் படி பலூசிஸ்தான் விடுதலைப் படையினர், ராணுவ முகாம்களைக் குறிவைத்து தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பிட்னா அல் ஹிந்துஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் விடுதலை படையினர் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கலாத் மாவட்டத்தில் ஒன்றுமறியா அப்பாவி பொதுமக்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பலூசிஸ்தான் விடுதலை படையினர் நடத்திய தாக்குதலில் 3 கொல்லப்பட்டதுடன், 13 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தானில் மட்டும் 35 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 51 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 30 பேர் பொதுமக்கள், 18 பாதுகாப்புப் படையினர் மற்றும் 3 பேர் பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.