தாய்லாந்து - கம்போடியா சண்டை 
உலகம்

புதிய போர்! கம்போடியா மீது ஜெட் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசிய தாய்லாந்து!

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா மீது ஜெட் விமானங்களைக் கொண்டு குண்டுகளை வீசியிருக்கிறது தாய்லாந்து!

இணையதளச் செய்திப் பிரிவு

தாய்லாந்து நாட்டின் எஃப்-16 ரக போர் விமானங்கள், வியாழக்கிழமை காலை முதல் கம்போடியாவின் எல்லைப் பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தாய்லாந்து நடத்திய தாக்குதலில், கம்போடியாவில் இரண்டு பேர் பலியாகினர். தாய்லாந்து ராணுவம், தங்களது ஆறு ஜெட் விமானங்களில் ஒன்றை, கம்போடியா தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகவும், அந்நாட்டு ராணுவ இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும் உறுதி செய்துள்ளது.

இந்த சண்டையைத் தொடங்கியதாக, இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றன.

இந்த சண்டையைத் தொடங்கியதாக, இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றன.

திட்டமிட்டபடி, கம்போடியா ராணுவ நிலைகளுக்கு எதிராக, எங்களது விமானப் படையைப் பயன்படுத்தியிருப்பதாக தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சண்டை காரணமாக, கம்போடியா -தாய்லாந்து இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. இந்த எல்லைத் தாண்டிய தாக்குதல் காரணமாக, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் வணிகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டு காலமாக, இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பதற்றம், தற்போது சண்டையாக மாறியிருக்கிறது. தாய்லாந்து ஜெட் விமானங்கள் இரண்டு குண்டுகளை சாலையில் வீசியிருப்பதை கம்போடியா அதிகாரிகள் உறுதி செய்திருக்கிறார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே 817 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியினால், மோதல் ஏற்பட்டு அவ்வப்போது சண்டையாகவும் மாறியிருக்கிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளால் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கம்போடியா படைகள்தான், தாய்லாந்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதில் தாய்லாந்து வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக போராட்டம்!

பேபி... ரெஜினா கேசண்ட்ரா!

வெண்மேகம்... காஜல் அகர்வால்!

சென்னையில் அதிகனமழை: ஜெர்மனியிலிருந்து மழை பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த முதல்வர்!

கார், அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது பரோடா வங்கி

SCROLL FOR NEXT