உலகம்

அமெரிக்காவில் சட்டத்தை மீறினால் வாழ்நாள் முழுமைக்கும் ‘விசா’ ரத்து: புது எச்சரிக்கை!

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.!

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினாலோ அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ வாழ்நாள் முழுமைக்கும் ‘விசா’ ரத்து செய்யப்படும் என்று புது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் சனிக்கிழமை(ஜூலை 26) வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘சட்டம் - ஒழுக்கத்தை முறையாகக் கடைப்பிடிக்கும் சமூகமாக அமெரிக்கா உள்ளது. இந்தநிலையில், வெளிநாட்டவர்களால் இங்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஆகவே, வெளிநாட்டவர்கள் சட்டத்தை மீறினால் அவர்களின் ‘விசா’ ரத்து செய்யப்படும்; திரும்ப அமெரிக்காவுக்குள் நுழையவே முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பார்வை... பரமேஸ்வரி!

6.36 கோடி வாக்காளர்கள் பெயரை 30 நாள்களில் எப்படி சரிபார்க்க முடியும்? - விஜய் கேள்வி!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

கரூரில் சிபிஐ அதிகாரிகள் 3-வது நாளாக விசாரணை!

SCROLL FOR NEXT