AP
உலகம்

வணிக வளாகத்தில் திடீர் கத்திக்குத்து! தாக்குதலால் 11 படுகாயம்; 6 பேர் கவலைக்கிடம்!

அமெரிக்காவில் தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவரின் திடீர் தாக்குதலில் 11 பேர் படுகாயம்

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவரின் திடீர் தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவில் மிக்ஸிகன் மாகாணம் டிராவர்சி நகரில் வால்மார்ட் வணிக வளாகத்தில் நுழைந்த ஒருவர், திடீரென அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார்.

தன்னிடமிருந்த கத்தியைக் கொண்டு, கண்ணில் பட்டவர்களையெல்லாம் குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நூற்றுக்கணக்கான பேர் அலைமோதும் ஒரு வணிக வளாகத்தில் ஒருவரின் திடீர் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும், அவர் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து - கம்போடியா ஒப்புதல்: டிரம்ப்

Walmart addresses mass stabbing at Michigan outlet that left 11 injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT