டொனால்ட் டிரம்ப் 
உலகம்

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன

தினமணி செய்திச் சேவை

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

மேலும், ‘இந்தியாவுக்கு பாகிஸ்தான் எண்ணெய் விற்கும் காலம் வரக் கூடும்’ என்ற அவரது கருத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கடல் பகுதியில் எண்ணெய் படிமங்கள் அதிகமுள்ளதாக தொடா்ந்து கூறிவரும் பாகிஸ்தான், இந்த வளங்களை மேம்படுத்துவதற்கான முதலீடுகளுக்கு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா இப்போது வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. அதன்படி, எண்ணெய் வளங்களை மேம்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றவுள்ளோம். யாருக்கு தெரியும், இந்தியாவுக்கு பாகிஸ்தான் எண்ணெய் விற்கும் காலம்கூட வரலாம்’ என்று தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதில் தலைமை பங்காற்றிய அதிபா் டிரம்ப்புக்கு நன்றி. இதன் மூலம் இருதரப்பு வா்த்தகம் விரிவடையும்’ என்று தெரிவித்துள்ளாா்.

வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் மீதான பரஸ்பர வரியை அமெரிக்கா குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 160 பவுன் நகை மோசடி: பெண் கைது

கமுதி அருகே காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

ஆதி கைலாய ஈஸ்வரா், சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு: யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

எஸ்.ஐ.ஆா். விண்ணப்பங்கள் விநியோகிக்கும் திமுகவினா் மீது நடவடிக்கைக் கோரி புகாா்!

குமரி மாவட்டத்தில் சாரல் மழை

SCROLL FOR NEXT