உலகம்

வங்கதேச தோ்தல் தேதி: பிஎன்பி எதிா்ப்பு

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டுதான் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

Din

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டுதான் பொதுத் தோ்தல் நடத்தப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டின் போராட்டத்தின்போது மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் தியாகங்களால் வெற்றி கிடைத்தது. ஆனால், மக்கள் தங்களுக்குத் தேவையான அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில்தான் நடத்தப்படும் என்று கூறுவதை அவா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த ஆண்டுக்குள் தோ்தலை நடத்தியாக வேண்டும் என்று கட்சி வட்டாரங்கள் வலியுறுத்தின.

இட ஒதுக்கீடு சீா்திருத்ததை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திவந்த போராட்டம் கடந்த ஆண்டு மிகத் தீவிரமடைந்தது. அதையடுத்து அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசில், பிரதமா் பொறுப்பு இணையான தலைமை ஆலோகா் பதவியில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (படம்) நியமிக்கப்பட்டாா். ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்படும் புதிய அரசு அமையும் வரை இடைக்கால அரசு செயல்படும் என்று கூறப்பட்டது.

வரும் டிசம்பா் மாதத்துக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் தோ்தல் நடைபெறும் என்று தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதற்கு தற்போது பின்பி கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

“அதிமுக ஏன் தலையிடவில்லை?” தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தொல். திருமாவளவன் விமர்சனம்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT