கோப்புப் படம் 
உலகம்

ஆஸ்திரியா: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி!

ஆஸ்திரியாவிலுள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

DIN

ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரத்திலுள்ள, பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிராஸ் நகரத்திலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில், இன்று (ஜூன் 10) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக, அந்நாட்டு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர், பள்ளிக்கூடத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக அவர்களது எக்ஸ் தளத்தில் காலை 11.30 மணியளவில் பதிவிட்டுள்ளனர். மேலும், அந்த இடத்தில் இனி எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து, உள்நாட்டு ஊடகங்கள் கூறுகையில், இந்தச் சம்பவத்தில், தாக்குதலில் ஈடுபட்டவர் மற்றும் 8-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எத்தனைப் பேர் பலியானர்கள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர் யார் எனும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக, ஆஸ்திரியா நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, அந்நாட்டின் 2 மிகப் பெரிய நகரமான கிராஸ்ஸில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க நூலகத்தில் தீ! போராடும் தீயணைப்புப் படை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தத்தளிப்பில் நேபாளம்!

காட்பாடியில் நிற்குமா கோவை - சென்னை வந்தே பாரத் ரயில்?

அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை சரிவுள்: அன்புமணி

பழைமையான கலாசாரத்தின் பிம்பம் அரிக்கன்மேடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தி சீனா சாம்பியன்!

SCROLL FOR NEXT