ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் AP
உலகம்

மத்தியஸ்தம் மூலம் உக்ரைன் போரை திசை திருப்ப ரஷியா முயற்சி?

இஸ்ரேல் போரின் மத்தியஸ்தத்தால், உக்ரைனுடனான போரிலிருந்து உலக நாடுகளை திசை திருப்பலாம் என்று ரஷிய ஊடகங்கள் கருத்து

DIN

இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த ரஷியாவால் முடியும் என்றாலும், அதிபர் விளாதிமீர் புதின் மத்தியஸ்தத்துக்கு மறுத்து வருகிறார்.

இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியஸ்தம் செய்வதன் மூலம், ரஷியா - உக்ரைன் போரிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை ரஷியா திசை திருப்ப முடியும் என்று அந்நாட்டு ஊடகங்கள் யோசனை தெரிவிக்கின்றன.

ஈரானுடன் வலுவான பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளைக் கொண்டிருக்கும் ரஷியா, இஸ்ரேலுடன் நெருங்கிய நட்புறவையும் கொண்டுள்ளது. ஆகையால்தான், இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

ஆனால், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு புதின் எதிர்ப்புதான் தெரிவித்தார்.

ஈரானின் ராணுவத் தளவாடங்கள் மீது இஸ்ரேல், வெள்ளிக்கிழமையில் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையேயான போரைத் தடுக்க புதினை மத்தியஸ்தம் செய்யுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மத்தியஸ்தம் செய்ய புதின் மறுத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத 200 தொழிற்கூடங்கள்

அந்தியூரில் திருவிழாவுக்கு வந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT