கோப்புப்படம்  AP
உலகம்

வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! துபை அரசு

துபையில் வேலை நேரம் குறைக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

கோடை காலத்தையொட்டி, துபை அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாளாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வேலை நேரத்தையும் குறைத்து துபை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்தாண்டு கோடை காலத்தையொட்டி, அரசு ஊழியர்களுக்கு வேலை நாள்கள் குறைக்கப்பட்டு, சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தாண்டும் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப் 1 அரசு ஊழியர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை 8 மணிநேரம் (காலை 7.30 - பிற்பகல் 3.30) மட்டுமே வேலை நேரமாகவும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 அரசு ஊழியர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை 7 மணிநேரமும், வெள்ளிக்கிழமை 4.30 மணிநேரமும் வேலை நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூலை 1 செவ்வாய்க்கிழமை முதல் செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை வரை இந்த வேலை நேரம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை உறுதிசெய்ய நேரம் குறைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்தாண்டு சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தால் உற்பத்தி அதிகரித்ததாக துபை மனிதவளத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணை வைக்க எதுவுமில்லை... ஜெனிபர்!

இளவெய்யிலே... ❤️🌸 மிஷா நரங்!

12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 முக்கிய தீர்மானங்கள்!

கறுப்பு வெள்ளை கலர்... ஹர்ஷிதா கௌர்!

ஜ்வலிப்பு... சோனம் கபூர்!

SCROLL FOR NEXT