கோப்புப் படம் 
உலகம்

சீனாவில் பட்டாசு ஆலை விபத்து! 9 பேர் பலி.. 26 பேர் படுகாயம்!

சீனாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

DIN

சீனாவின் மத்தியப் பகுதியிலுள்ள, பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட மிகப் பெரியளவிலான வெடி விபத்தால் 9 பேர் பலியாகியுள்ளனர்.

ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில், இன்று (ஜூன் 17) வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த ஆலையின் கட்டடம் முழுவதும் வெடித்துச் சிதறியதுடன், அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், 26 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான விடியோக்களில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, கட்டட இடிபாடுகள் சிதறி கிடப்பது பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் அவசரகால மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மீட்புப் பணிகளை வழிநடத்த குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மேலும் 2 விமானங்கள் இன்று ரத்து: ஏர் இந்தியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

உலக சினிமா

ஆபரேஷன் சிந்தூர்

தென்னாப்பிரிக்கக் காடுகளில்...

SCROLL FOR NEXT