அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  (கோப்புப் படம்)
உலகம்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக..! - டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேற வேண்டுமென டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதைப் பற்றி...

DIN

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல் 4-வது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது. இரு நாடுகளும் தாக்குதலை தொடரவிருப்பதால் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

இந்த நிலையில், கனடாவில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருநாள் முன்னதாக புறப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிக்கை தெரிவித்திருக்கிறது.

மேலும், அவர், “சில முக்கிய காரணங்களுக்கான நான் திரும்பி வரவேண்டும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் டிரம்ப் ஒருநாள் முன்னதாக புறப்படுவதை, அவரின் பத்திரிகை செயலாளர் கரோலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உறுதிபடுத்தியிருக்கிறார்.

இதற்கிடையே ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளப் பதிவில், “நான் கையெழுத்துப் போடக் கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்தியிருக்க வேண்டும்.

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது வெட்கக் கேடானது. இதனால், மனித வாழ்க்கைதான் வீணாகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உடனே டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT