உலகம்

வெறும் கீறல் மட்டுமே! ராக்கெட் வெடித்துச் சிதறிய விபத்தில் எலான் நகைச்சுவை?

ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்துச் சிதறிய நிலையில், வெறும் கீறல் மட்டும்தான் என்று எலான் மஸ்க் பதிவு

DIN

அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்துச் சிதறியதை நகைச்சுவையாகச் சித்திரித்து, எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் இன்று (வியாழக்கிழமை) சோதனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் இந்த ராக்கெட் சோதனையை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், இன்று சோதனை நேரத்துக்கு சற்று முன்பாக என்ஜின் இயக்கப்பட்ட நிலையில் ராக்கெட் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்பாகவும் புகைமூட்டமாகவும் காணப்பட்டது. இது தொடர்பான விடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இருப்பினும், ராக்கெட் வெடித்துச் சிதறிய விபத்தைக் குறிப்பிட்ட எலான் மஸ்க், வெறும் கீறல் மட்டும்தான் என்று குறிப்பிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த இந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை வருகிற ஜூன் 29 ஆம் தேதி விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 4கே தொழில்நுட்பத்தில் காஸாவில் நிகழும் இனப்படுகொலை..! இஸ்ரேலுக்கு எதிராகப் பேசிய நடிகர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

SCROLL FOR NEXT