உலகம்

ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்! டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக் கணிப்பு!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவு, எதிர்ப்பு குறித்து கருத்துக் கணிப்பு

DIN

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில் பெரும் அமைதியின்மை நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரானுக்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து, 1000 பேரிடம் தி வாஷிங்டன் போஸ்ட் கருத்துக் கணிப்பு நடத்தியது.

ஆய்வில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் முடிவுக்கு 47 சதவிகிதத்தினர் ஆதரவும், 24 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 29 சதவிகிதத்தினர் கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிய வந்தது.

அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு கட்சியினர், அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியில், 47 சதவிகிதத்தினர் ஆதரவாகவும், 24 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 29 சதவிகிதத்தினர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேபோல, டிரம்பின் ஆதரவாளர்களில், 46 சதவிகிதத்தினர் ஆதரவாகவும், 26 சதவிகிதத்தினர் எதிர்ப்பும், 28 சதவிகிதத்தினர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இதையும் படிக்க: ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

பிரசித்திபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் ஆலய தேர்த் திருவிழா: தேரை வடம்பிடித்து இழுத்த ஆளுநர், முதல்வர்

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

SCROLL FOR NEXT