இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்! 
உலகம்

அமெரிக்காவுக்கு பதிலடி! இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை தொடங்கிய ஈரான்.

DIN

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரான் 30க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளன.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு ஈரான் - இஸ்ரேல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒருவருக்கு பலத்த காயமும் 15 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.

அவர்களில் இரண்டு குழந்தைகள் டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவ மையத்தில் சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பிற பகுதிகளிலும் சைரன்கள் ஒலித்தன, இதனால் பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் அறிவுறுத்தலின் பேரில் பதுங்கு குழிகளுக்கு விரைந்து சென்றனர்.

இதையும் படிக்க: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா? உலக நாடுகள் பதற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் MK Stalin!

தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி!

என்னை மனமார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து! பேருந்து - டிரக் மோதியதில் 10 பேர் பலி!

SCROLL FOR NEXT