ரஷிய அதிபர் புதின் - ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி  
உலகம்

ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷியா செல்லவுள்ளார்.

DIN

ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷியா செல்லவுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திங்கள்கிழமை மாஸ்கோவிற்கு செல்லவிருப்பதாக அவர் அறிவித்தார். ரஷியாவில் நாளை தீவிர ஆலோசனைகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். ஈரானில் ரஷியா அமைத்த அணுசக்தி தளம் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதிய இஸ்ரேல், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது. ஈரானுடன் நீண்ட காலம் போா் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இஸ்ரேல் தயாராக வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த நிலையில் நிலையில், ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா நேற்று(ஜூன் 21) திடீர் தாக்குதல் நடத்தியது.

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

பிக் பாஸுக்குப் பிறகு... பவித்ரா ஜனனியின் புதிய தொடர்!

செபியில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பவர்கிரிட் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.6.46 கோடியில் அதிநவீன உபகரணங்கள்!

குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த வெள்ளம்!

SCROLL FOR NEXT