ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிலவி வரும் நிலையில், நேற்று(ஜூன் 21) 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து, அந்நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது:
ஈரான் மீதான தாக்குதல் வெற்றி அடைந்துள்ளது. அமெரிக்க ராணுவம் நடத்திய சிறப்பான தாக்குதலுக்கு வாழ்த்துகள். ஈரான் மீதான தாக்குதல் தொடரும்; அமைதி ஏற்படும் அல்லது அழிவு ஏற்படும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து குழுவாக பணியாற்றியுள்ளோம். அவருக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பயங்கரவாத அச்சுறுத்தலைத் தகர்த்து எறிவதில் நீண்ட தூரம் சென்றுவிட்டோம். இஸ்ரேல் ராணுவத்துக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. போர் விமானங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. வேறு எந்த நாடும் செய்யாதவொன்றை அமெரிக்கா செய்துள்ளது.
கடந்த 8 நாள்களில் நாம் பார்த்த தாக்குதலைவிட இது மிகவும் அதிகம். நினைவில் கொள்ளுங்கள். இன்னும் பல இலக்குகள் உள்ளன. பல ஆண்டுகளாக உலகம் கண்டிராத நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தை வாழ்த்துகிறேன்.
உலகிலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான். சில இலக்குகள் விட்டு வைத்துள்ளோம். ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிடில் தாக்குதல் தீவிரமாக இருக்கும். பெரும்பாலான இலக்குகளை சில நிமிடங்களிலேயே அழித்துவிடுவோம் என்று பேசினார்.
இதையும் படிக்க: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா? உலக நாடுகள் பதற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.