X | António Guterres
உலகம்

இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா! ஐ.நா. கவலை!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அவை கவலை

DIN

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் கவலை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து அன்டானியா கூறுகையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஏற்கெனவே போரில் ஈடுபட்டிருப்பவர்களின் மீதான தாக்குதல், ஆபத்தான நடவடிக்கையே.

இது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலை விளைவிக்கும். அமெரிக்காவின் தாக்குதல், உலகளவிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்.

இந்தத் தாக்குதல், மக்களுக்கும் உலகுக்கும் பேரழிவை ஏற்படுவதாக அமையும். ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டவிதிகளின்கீழ், போர்ப் பதற்றத்தைத் தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்.

டொனால்ட் டிரம்ப்

இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். ராணுவ நடவடிக்கையானது, ஒருபோதும் தீர்வாக அமையாது.

அமைதி, பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கிக் கொண்டு செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, அமெரிக்கா தொடங்கிய போரை, தாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் ஈரானும், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவிருப்பதாக ஹவுதி அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதையும் படிக்க: அமெரிக்கா தொடங்கிய போரை ஈரான் முடித்து வைக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

கண்கள் பேசும்... சோஃபியா!

அழகிய தீயே... ராஷி சிங்!

SCROLL FOR NEXT