அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் AP Photo
உலகம்

அரபு நாடுகளே அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி: ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!

அரபு நாடுகளைக் குறிவைக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் - ஃபரூக் அப்துல்லா கண்டனம்!

DIN

ஸ்ரீநகர்: அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே என்று ஃபரூக் அப்துல்லா பேசியிருக்கிறார். இதன்மூலம், தேசிய மாநாட்டு(என் சி) கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அரபு நாடுகளுக்கு இன்று(ஜூன் 23) எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

“ஈரான் அணுசக்தி நாடாக மாறிவிடக்கூடாது என்பதே அமெரிக்காவின் நெடுங்கால கொள்கை.

மத்திய கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலுள்ள சன்னி பிரிவு நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், அதனை வெளிப்படையாக எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் இல்லை.

இன்று, ஈரான் தாக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள்(அரபு நாடுகள்) நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்களுக்கொரு எச்சரிக்கையை நான் விடுக்கிறேன். ஒருநாள் இஸ்ரேல் உங்களையும் தாக்கும். ஏனெனில், உங்களிடமுள்ள பெரும் சொத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு அவர்களுக்கு தேவை. இவ்விவகாரத்தில் இஸ்ரேல் ஒரு பகடைக்காய் மட்டுமே. இதன் பின்னணியில் அமெரிக்காதான் நேரடியாகச் செயல்படுகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

SCROLL FOR NEXT