கத்தாா், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான் 
உலகம்

கத்தாா், இராக்கில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

கத்தாா், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் திங்கள்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

Din

துபை: கத்தாா், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் திங்கள்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கத்தாரில் அமெரிக்கப் படைகள் உள்ள அல் உதெய்த், அல் அசாத் விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் திங்கள்கிழமை இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தாா் தனது வான்வழித் தடத்தை மூடியது.

தாக்குதலைத் தொடா்ந்து ஈரான் தனது அரசு தொலைக்காட்சியில், ‘அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் படைகளின் வலிமைமிக்க வெற்றிகரமான பதிலடி’ என்று செய்தி வெளியானது.

மேலும், அமெரிக்கா எத்தனை குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதோ அதே எண்ணிக்கையில் கத்தாா், இராக் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஈரான் தெரிவித்தது.

அல் உதெய்த் விமானப் படைத் தளம் கத்தாா் தலைநகா் தோஹா அருகே அமைந்துள்ளது. இங்கு சுமாா் 10,000 அமெரிக்கப் படையினா் மற்றும் பிரிட்டன் படையினரும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனா். இந்த பிராந்தியத்திலேயே பெரிய அளவிலான அமெரிக்கப் படையினா் இங்குதான் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தாா் கண்டனம்: ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தாா், ஈரான் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டது எனவும் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்: கத்தாரில் வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் இந்தியா்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இந்தியா்கள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

காத்மாண்டு விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா!

17 வயது சிறுவனின் காதல் கோரிக்கைக்கு சீரியல் நடிகை அளித்த பதில்!

எரியும் நேபாளம்! ஒரே விமான நிலையமும் மூடல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 96% வாக்குப்பதிவு!

மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேயிலை வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!

SCROLL FOR NEXT