கோப்புப் படம் 
உலகம்

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவது குறித்து...

DIN

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த, இருதரப்புக்கும் இடையில் கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.

இந்நிலையில், இந்தப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையானது கடந்த சில மணி நேரங்களாகத் தீவிரமடைந்துள்ளதாக, ஹமாஸ் மூத்த தலைவர் தாஹெர் அல்-நுனு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

“போர்நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் செய்யும் எங்கள் சகோதரர்களான எகிப்து மற்றும் கத்தார் ஆகியோருடனான எங்களது தொடர்பு நிறுத்தப்படவில்லை, கடந்த சில மணிநேரங்களாக அது தீவிரமடைந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், போர்நிறுத்தத்துக்கான எந்தவொரு புதிய ஒப்பந்தத் திட்டங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேலான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

ஹேக்கிங் என்பது என்ன? எப்படி நடக்கிறது?

SCROLL FOR NEXT