(Photo | AFP) AFP  
உலகம்

பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதியதில் 37 பேர் பலி

பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 37 பேர் பலியானார்கள்.

DIN

பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 37 பேர் பலியானார்கள்.

தெற்கு பொலிவியாவின் போடோசி பகுதியில் சனிக்கிழமை இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 37 பேர் பலியானார்கள். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேருந்துகளில் ஒன்று எதிர் பாதையில் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடவுச்சீட்டுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்! மத்திய அரசு

இருப்பினும் விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர் ஒருவர் விபத்துக்கு முன்னர் மது அருந்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அவர் மது அருந்துவதை பயணிகள் பார்த்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

SCROLL FOR NEXT