மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கன் நாட்டினர் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்
மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.
மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஏஆர்ஒய் செய்திகளின்படி, ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்திருப்பவர்கள் தாங்களாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இல்லையெனில் அவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு கடத்தப்படுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் ஆப்கன் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேற போதுமான கால அவகாசம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆப்கன் நாட்டினரை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
சோமநாதர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித் ஷா வழிபாடு
ஆனால் இந்த தகவலை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை என்று ஏஆர்ஒய்(ARY) செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதும், அந்நாட்டில் இருந்து சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.