மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக இன்று(மார்ச் 11) காலை மோரீஷஸ் சென்றடைந்தார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசமான மோரீஷஸில் இந்தியா அளித்துள்ள நிதியுதவி மூலம் அமைக்கப்படவுள்ள 20 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வோா் ஆண்டும் இந்த தினம் மோரீஷஸ் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு மோரீஷஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.