ரயில் சிறைப்பிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரயிலில் இருந்த 104 பயணிகள் பத்திரமாக பாதுகாப்பு பணியாளர்களால் மீட்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குடாலர் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் அதை வழிமறித்தனர். இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தினர் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை பாதுகாப்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், சிறைபிடிக்கப்பட்ட ரயிலிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 104 பயணிகளை அவர்கள் மீட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.