ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல் 
உலகம்

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.

Din

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.

பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரண்டாவது கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கப்பல் அதிநவீன ஆயுதங்கள், சென்சாா்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. மேலும் நீா்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டாா்பீடோ குண்டுகள், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் திறன் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டுக்குக் கடந்த 4 ஆண்டுகளில் நவீன கடற்படை போா்க் கப்பல்களை சீனா வழங்கியுள்ளது. தற்போது கூடுதலாக மேலும் ஒரு நீா்மூழக்கிக் கப்பலை சீனா ஒப்படைத்துள்ளது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘8 ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்களில் 4 கப்பல்கள் சீனாவிலும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் அடிப்படையில் 4 கப்பல்கள் பாகிஸ்தானிலும் கட்டப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அரபிக் கடற்பகுதியில் தமது ஆதிக்கத்தை சீன கடற்படை விரிவுபடுத்தி வருகிறது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அந்தக் கடற்பகுதியில் குவாடா் துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது. இதேபோல இந்திய கடற்பகுதியிலும் தமது ஆதக்கத்தை சீனா விஸ்தரித்து வருகிறது. இந்தச் சூழலில், பாகிஸ்தானுக்கும் சீனா போா்க் கப்பல்களை வழங்கி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் ஆயுதங்கள் ஏற்றுமதியில் 63 சதவீதம் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் மதிப்பு 5.28 பில்லியன் டாலா்களாகும் (சுமாா் ரூ.45,908 கோடி).

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

SCROLL FOR NEXT