போப் பிரான்சிஸ்   AP
உலகம்

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

இரு மாதங்களுக்கு போப் பிரான்சிஸ் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல்.

DIN

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச் 23) மருத்துவமனையிலிருந்து திரும்புவார் (டிஸ்சார்ஜ்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், குறைந்தது இரு மாதங்களுக்கு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவாசக் கோளாறு காரணமாக பிப். 14ஆம் தேதி ரோம் நகரிலுள்ள ஜெமிலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் (88) அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 38 நாள்களாக மருத்துவமனையில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மருத்துவமனையில் இருந்து திரும்புகிறார்.

நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தபோது இரண்டு முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை போப் சந்தித்தார்.

எனினும் வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டு அதன் உதவியுடன் அவர் சுவாசித்து வந்தார்.

தற்போது போப் உடல்நிலை குறித்து பேசிய ஜெமிலி மருத்துவமனை இயக்குநரும் மருத்துவருமான செர்ஜியோ அல்ஃபெய்ரி,

''போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். எனினும் அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

வாட்டிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்னர் ஜெமிலி மருத்துவமனையில் இருந்தவாறு போப் ஆசீர்வாதம் வழங்குவார் என வாடிகன் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் முதல்முறையாக பொதுவெளியில் மக்களை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளா்ச்சி: பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT