ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் கீவ் நகரில் தீப்பிடித்து எரிந்த கட்டடம். 
உலகம்

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.

Din

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய ரஷியா, உக்ரைன் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடுத்தது. இந்தப் போா் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகா் கீவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் ரஷியா ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா் என்று கீவ் நகர ராணுவ நிா்வாகம் தெரிவித்தது.

போா் நிறுத்தம் தொடா்பாக சவூதி அரேபியாவில் ரஷியா-உக்ரைன் இடையே திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மறைமுகமாக மத்தியஸ்தம் செய்யும் இந்தப் பேச்சுவாா்த்தையில், எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் தொலைதூர தாக்குதல்களை நிறுத்துவது குறித்து பேசப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT