உலகம்

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.

DIN

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுரில், ஈரானின் நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா் ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டனா்.

இஸ்ரேல் தொடா்பான கப்பல்களை மட்டுமே தாக்குதவதாக அவா்கள் கூறினாலும், இதனால் சா்வதேச கடல் வா்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து, யேமனில் ஹூதி இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்தின.

இந்த நிலையில், காஸாவில் கடந்த ஜன. 19 முதல் போா் நிறுத்தம் அமலில் இருந்ததால் ஹூதி கிளா்ச்சியாளா்களும் செங்கடலில் தங்களின் தாக்குதலை நிறுத்திவைத்திருந்தனா். ஆனால் அந்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடா்ந்து தங்கள் தாக்குதலை ஹூதிக்கள் மீண்டும் தொடங்கினா்.

இதன் காரணமாக, யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து அமெரிக்கா கடந்த 15-ஆம் தேதி முதல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்புக்கு சமர்ப்பிக்கிறேன்! - மரியா மச்சாடோ

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

SCROLL FOR NEXT