இம்ரான் கான் கோப்புப் படம்
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு: இம்ரான் கான் பெயர் பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (72) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

DIN

ப்பஅமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (72) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மனித உரிமைகளைக் காப்பதற்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உலக கூட்டணியின் உறுப்பினர்கள் இம்ரான் கான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். கடந்த டிசம்பரில் நிறுவப்பட்ட இந்த வழக்குரைஞர்கள் குழுவானது, நார்வேயில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான பார்டியட் சென்ட்ரம் உடன் தொடர்புடையது.

இது குறித்து பார்டியட் சென்ட்ரம் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''பார்டியட் சென்ட்ரம் சார்பாக நாங்கள் மகிழ்ச்சியுடன் இதனை அறிவிக்கிறோம். பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்காக செய்த பணிக்காக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் இம்ரான் கான்

பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், கடந்த ஜனவரி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிஸ் வெளியீட்டுத் தேதி அப்டேட்!

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?: தவெக தலைவர் விஜய் கண்டனம்

தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது!

தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்

SCROLL FOR NEXT