மீண்டும் சிங்கப்பூர் பிரதமராகும் லாரன்ஸ் வாங்க் AP
உலகம்

சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோடி வாழ்த்து

மீண்டும் சிங்கப்பூர் பிரதமராகும் லாரன்ஸ் வாங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

DIN

சிங்கப்பூா் நாடாளுமன்ற தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆளுங்கட்சியான பிஏபி கட்சி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மொத்தமுள்ள 97 இடங்களில் 87 இடங்களை அக்கட்சியே கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வாங்க் மீண்டும் பதவியில் தொடருகிறார். இதையடுத்து, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: ‘பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்கை மனதார வாழ்த்துகிறேன். இந்தியாவும் சிங்கப்பூரும் பன்முக பங்களிப்பை பகிர்ந்து கொண்டுள்ளது. இருநாட்டு மக்களும் இணக்கமாக உறவைக் கடைப்பிடிக்கின்றனர். இந்தநிலையில், சிங்கப்பூருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக தேசமான சிங்கப்பூர், மக்கள் செயல் கட்சியின்(பிஏபி) கோட்டையாக திகழ்கிறது. அக்கட்சியே கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் லாரன்ஸ் வாங்க் பிரதமராகப் பதவி வகிக்கிறார்.

சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டுக்குப் பின், தொடர்ந்து 60 ஆண்டுகளாக பிஏபி கட்சி ஆட்சியில் நீடிக்கிறது.

வெளிப்படையான அரசு நிர்வாகமும், சிங்கப்பூரின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியும் பிஏபி கட்சி மீதான மக்களின் நம்பிக்கைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், சிங்கப்பூர் தேர்தலில் தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளம்!

குஜராத் பாஜக தலைவராக ஜெகதீஷ் விஸ்வகர்மா நியமனம்!

ஸுபீன் கர்க் விஷம் கொடுத்து கொலை - வெளியான திடுக் தகவல்

மோடி அரசின் சதியை முதல்வர் முறியடிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

Vijay மீது வழக்குப்பதிய திமுகவிற்கு பயமா? கே.என். நேரு சொன்ன பதில்

SCROLL FOR NEXT