தாக்குதலுக்குள்ளான விமான நிலையத்திற்குட்பட்ட பகுதி AP
உலகம்

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்ததாகக் குறிப்பிட்டு, இச்சம்பவத்தை இஸ்ரேல் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்திற்குட்பட்ட காஸாவின் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹமாஸுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தற்போது இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் விமான நிலையத்திற்குச் சொந்தமான இடங்கள் சேதமடைந்தன.

அதாவது, விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திலிருந்து 75 மீட்டர் தொலைவில் ஹவுதியின் ஏவுகணை விழுந்து தாக்கியுள்ளது.

இதனால், அந்த விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டு, விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் பேசியதாவது, 'எங்கள் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏழு மடங்கு பதிலடி கொடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க | பயங்கரவாத அச்சுறுத்தல்: லண்டனில் ஈரானைச் சேர்ந்த பலர் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்புக்கு சமர்ப்பிக்கிறேன்! - மரியா மச்சாடோ

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

SCROLL FOR NEXT