பலோசிஸ்தான் 
உலகம்

பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை: சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு

பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை என்றும் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும் அறிவிப்பு

DIN

பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பலூசிஸ்தான் மக்கள் தங்கள் "தேசிய தீர்ப்பை" வழங்கியுள்ளனர் என்றும், உலகம் இனி அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட பலூசிஸ்தான் மக்கள், சாலைகளில் திரண்டுள்ளனர். இது அவர்கள் வழங்கிய தேசிய தீர்ப்பு. இனி பலூசிஸ்தான், பாகிஸ்தான் கிடையாது. எனவே, உலகம், இனியும் வெறும் பார்வையாளராக அமைதியாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களும் இனி பலூசிஸ்தானை பாகிஸ்தான் என அழைக்க வேண்டாம் என்றும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் பலூசிஸ்தானிலிருந்து வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உலக நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT