பிரதிப் படம் 
உலகம்

இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாகத் தகவல்

DIN

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமையில் இன்டன் ஜயா பகுதியில், அப்பகுதி மக்களுக்கு சுகாதார மற்றும் கல்வி சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 18 கிளர்ச்சியாளர்களும், 2 காவல் அதிகாரிகளும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 3 கிளர்ச்சியாளர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் கிளர்ச்சியாளர்கள்போல வேடமிடப்பட்ட அப்பாவி பொதுமக்கள் என்றும் கூறுகின்றனர்.

இருப்பினும், அரசின் தரப்பில் எந்த உயிரிழப்புகளும் இல்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தோனேசியாவுடன் பண்டைய டச்சு காலனியான பப்புவா மாகாணத்தை இணைத்த காலத்தில் இருந்து, கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணம் ரூ.15,516 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்திருப்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

இறைச்சித்தம் வழங்கிய தலைமைக் கொடை!

நம்பிக்கை கொடுக்கிறது!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு முழு தடை விதிக்க கோரிக்கை

SCROLL FOR NEXT