AP
உலகம்

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

உக்ரைன் மீது பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.

DIN

ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.

ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும்நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்பட வேறுசில நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மே 15 ஆம் தேதியில் துருக்கியில் ரஷியா - உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முதன்முறையாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில், போர்க்கைதிகள் பரிமாற்றம் தவிர்த்து, மற்ற கோரிக்கைகள் எதுவும் எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், சனிக்கிழமையில் உக்ரைனின் மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் ரஷியா ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

ட்ரோன் தாக்குதலுக்குள்ளான பேருந்து

சுமார் 270-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால், இதுவரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுதான் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் என்று கூறுகின்றனர். இந்தத் தாக்குதலில் ஒரு பெண் பலியானதுடன், குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

2025, பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் போர் தொடங்கி மூன்றாவது ஆண்டைத் தொட்டதால், அன்றைய நாளில் 260-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. முன்னர்வரையில், இந்தத் தாக்குதல்தான் பெரியளவில் பார்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டலுக்குள் நுழைந்து சுற்றிப்பார்த்த காட்டு யானைகள்!

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

வனத்துறையினரின் வாகனத்தை ஆவேசமாக தாக்கிய காட்டு யானை! பதைபதைக்கும் விடியோ!

காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!

தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு

SCROLL FOR NEXT