சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி கருத்துகளையும் பகிர்ந்தனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இரண்டும் செயல்படவில்லை என பதிவிட்டனர்.
இருப்பினும், சிறிது நேரத்திலேயே எக்ஸ் தளம் செயல்படத் தொடங்கியது. இந்த இடையூறுக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் பெறப்படவில்லை.
எக்ஸ் தளம் முடங்குவது என்பது அவ்வப்போது நிகழ்வதாகவே இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.