FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போனில் எந்த பிரச்னையும் இல்லை.. உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்!

உலகம் முழுவதும் பல நாடுகளில் யூடியூப் சேவை முடங்கியது.

Updated On : 18 பிப்ரவரி 2026, 11:50 am IST
யூடியூப் - ANI
பகிர்:

சில மணி நேரமாக ஒருவரது செல்போனில் யூடியூப் பக்கங்கள் செயல்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்குக் காரணம் செல்போனோ அல்லது நெட்வொர்க் பிரச்னையோ காரணமல்ல. உலகம் முழுவதும் பல நாடுகளில் இன்று யூடியூப் முடங்கியிருக்கிறது.

இன்று காலை முதலே, யூடியூப் பக்கத்தின் முகப்புப் பக்கத்தில் சம்திங் வென்ட் ராங் என்று ஆங்கிலத்தில் தகவல் வந்தது. சிலருக்கு யூடியூப் லிங்குகள் வேலை செய்யாமல் இருந்தன.

இது குறித்து ஏராளமான பயனர்கள் புகார் அளித்திருந்த நிலையில் யூடியூப் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது. அதாவது எங்கள் பரிந்துரைகள் அமைப்பில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம். முதலில், யூடியூப் முகப்புப் பக்கத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

Advertisement

Advertisement

படிப்படியாக அனைத்துப் பிரச்னைகளையும் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று விளக்கம் கொடுத்துள்ளது.

யூடியூப் பக்கம் முடங்கியதுமே, பல பயனர்கள் தங்களது செல்போனில்தான் பிரச்னை என்று நினைத்தனர். ஆனால், பிறகு இது யூடியூப் தொழில்நுட்பக் கோளாறு என்று செய்திகள் வெளியாகின. அப்போது யூடியூப் நிறுவனம் கொடுத்த முதல் பதிவில், யூடியூப் சேவை பெறுவதில் உங்களுக்கு பிரச்னை இருக்கலாம். அவ்வாறு சிக்கல் இருந்தால் நீங்கள் தனியாக இல்லை. எங்களது நிறுவனம் அதனை சரி செய்ய உழைத்து வருகிறது என்று பதிவிட்டிருந்தது.

பிறகு, கொடுத்த விளக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் பரிந்துரைகள் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு யூடியூப் முகப்புப் பக்கம், யூடியூப் செயலி, யூடியூப் மியூசிக், யூடியூப் கிட்ஸ் பக்கங்களில் விடியோக்கள் வருவதை தடுத்துள்ளது. தற்போது முகப்புப் பக்கம் மட்டும் சரி செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிக்கல்களையும் சரி செய்ய எங்கள் குழு தொடர்ந்து வேலை செய்து வருகிறது. விரைவில் பிரச்னை சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments