சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் விசாரிக்கப்பட்டவரும் தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் பிரதமா் பெட்ஸி சாவேஸுக்கு மெக்ஸிகோ அடைக்கலம் அளித்ததால், அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை முறிப்பதாக பெரு அரசு அறிவித்தது.
இது குறித்து பெரு வெளியுறவுத் துறை அமைச்சா் ஹூகோ டிசெலா (படம்) செய்தியாளா்களிடம் கூறுகையில், தலைநகா் லீமாவில் உள்ள மெக்ஸிகோ தூதரகத்தில் சாவேஸுக்கு அடைக்கலம் அளித்தது நட்புக்குப் புறம்பான செயல். இது, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே உள்ள பதற்றத்தை அதிகரிக்கிறது. எனவே, அந்த நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்ராா் அவா்.
பெரு அதிபா் ஜோஸ் ஜெரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெக்ஸிகோ அரசு தங்கள் நாட்டின் உள் விவகாரங்களில் மீண்டும் மீண்டும் தலையிடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022-இல் அப்போதைய அதிபா் பெட்ரோ காஸ்டிலோ அவசரநிலை அறிவித்து, நாடாளுமன்றத்தைக் கலைக்க முயன்றாா். தோல்வியடைந்த முயற்சியில் சாவேஸ் பங்கேற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து அவரைப் பாதுகாக்கவே பெருவில் உள்ள தங்களின் தூதரகத்தில் சாவேஸுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளது.