மத்திய பிலிப்பின்ஸின் செபு நகரில் கேல்மெகி புயலால் பெரும் பாதிப்பு AP Photo
உலகம்

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

கேல்மெகி புயலால் பிலிப்பின்ஸில் பெரும் பாதிப்பு: 26 பேர் உயிரிழப்பு!

இணையதளச் செய்திப் பிரிவு

மணிலா: பிலிப்பின்ஸில் கேல்மெகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன் 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, மத்திய பிலிப்பின்ஸில் செபு மாகாணம் உள்பட பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் முடங்கியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீடுகள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

பிலிப்பின்ஸில் புயல் கடந்து செல்லும்போது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசியதால் மரங்கள் பல முறிந்து விழுந்ததுடன், பெருவெள்ளத்தால் வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதும் அளவுக்கு பலத்த சேதமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அங்கிருந்து வரும் படங்கள் விவரிக்கின்றன.

பிலிப்பின்ஸைத் தொடர்ந்து இந்தப் புயல் சின்னம், தென் சீனக் கடல் பகுதிக்கு அருகே பாலவான் மாகாணத்தில் புதன்கிழமை(நவ. 5) அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Typhoon Kalmaegi leaves 26 dead in Philippines, people trapped on roofs, cars submerged .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தூதரகத்துக்கு வெளியே ஹிந்து அமைப்பினர் போராட்டம்!

அமெரிக்க கடல்பகுதியில் மெக்சிகோ கடற்படை விமானம் விபத்து! 5 பேர் பலி!

உழவர் நலனைக் காக்கும் சாதனைகள் தொடரும்! முதல்வர் ஸ்டாலின்!

கேரளத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல்: முன்னெரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!

SCROLL FOR NEXT