வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.
வங்கதேச நாட்டில், நிகழாண்டு (2025) துவங்கியது முதல் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இதில், தலைநகர் டாக்கா மற்றும் மைமென்சிங் ஆகிய நகரங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்குவுக்கு 5 பேர் பலியானதாகவும்; இதனால், 2025 ஆம் ஆண்டில் டெங்குவால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கடந்த 24 மணிநேரத்தில் 1,034 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 2025 ஆம் ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலினால் சுமார் 76,026 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு, வங்கதேசத்தில் சுமார் 1,01,214 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர். அதில், 575 பேர் சிகிச்சை பலனின்றி பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாடிகனில் போப் 14-ம் லியோவுடன் பாலஸ்தீன அதிபர் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.