எலான் மஸ்க் கோப்புப் படம்
உலகம்

உலகின் முதல் டிரில்லியன் டாலர் சம்பளம்! எலான் மஸ்க் கோரிக்கை

தனக்கு ஒரு டிரில்லியன் சம்பளம் வேண்டும் என்று டெஸ்லா நிறுவனத்திடம் எலான் மஸ்க் கோரிக்கை

இணையதளச் செய்திப் பிரிவு

டெஸ்லா நிறுவனரும் உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்க், தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என்று கோரியுள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரும் உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்க்கின் ஒரு டிரில்லியன் சம்பளம் என்ற கோரிக்கைக்கு டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்படவுள்ளது.

மஸ்க்கின் அரசியல் கருத்துகளால் டெஸ்லா விற்பனை சரிவில் செல்லும்நிலையில் - அவர் சம்பளத்தை உயர்த்திக் கேட்பதாகவும், உலகளவிலான செல்வ ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பிட்டும் எலான் மஸ்க்கின் சம்பள உயர்வுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சம்பள உயர்வு இல்லையெனில், டெஸ்லாவை விட்டு விலகி விடுவதாகவும் எலான் மஸ்க் கூறியதாகத் தெரிகிறது.

ஆயினும், எலான் மஸ்க் ஒரு மேதை. அவர் இல்லாமல், டெஸ்லா அதன் மதிப்பை இழக்கும். அவரால்தான், எதிர்காலத்தில் ரோபோக்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதால், அவருக்கு கவனச் சிதறல் ஏற்படாமலிருக்க சம்பளம் அதிகரிக்கலாம் என்று மறுதரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், சம்பள உயர்வு குறித்து எலான் மஸ்க் கூறுகையில், ``சம்பள உயர்வானது பணத்துக்காக அல்ல. டெஸ்லாவின் எதிர்கால ரோபோ ராணுவத்தைக் கட்டுப்படுத்த வேறு யாரையும் என்னால் நம்ப முடியாது.

அதனால்தான், நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற அதிக பங்குகள் வேண்டும்’’ என்று தெரிவித்தார். அதாவது, தற்போது 15 சதவிகித டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் வைத்திருக்கும் நிலையில், அதனை 30 சதவிகிதமாக உயர்த்திக் கேட்கிறார்.

இதையும் படிக்க: சீன விண்வெளி வீரா்கள் பூமி திரும்பவதில் சிக்கல்

Elon Musk to be World’s first Trillionaire? Tesla shareholders to vote on record $1 trillion pay package

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலைப் பிடித்து... ஜூஹி ஜெயகுமார்!

கும்கி 2 - டிரைலர் வெளியீடு!

அன்பே... பெரோஷா கான்!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து, தயவுசெய்து உதவுங்கள்; பாடகி சின்மயி புகார்!

சென்னை > தோஹா > ரியாத் > குவைத் > துபை > சென்னை... கல்யாணி பிரியதர்சன்!

SCROLL FOR NEXT