ரோஹிங்கயா அகதிகள் படகு விபத்தில் உயிரிழந்தவரை தாய்லாந்து கடல் பகுதியில் இருந்து மீட்டு எடுத்துவந்த அந்த நாட்டு கடற்படையினா். 
உலகம்

மலேசியா படகு விபத்தில் 21 ரோஹிங்கயாக்கள் உயிரிழப்பு

மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா்.

Chennai

மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்களைக் காணவில்லை.

இது குறித்து மலேசிய கடல்சாா் அமைப்பின் பிராந்திய தலைவா் ரொமில் முஸ்தஃபா திங்கள்கிழமை கூறியதாவது: மியான்மரில் இருந்து மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்த 12 பேரது உடல்கள் மலேசியா பகுதியிலும், 9 பேரது உடல்கள் தாய்லாந்திலும் மீட்கப்பட்டன. 13 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். எஞ்சியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

பாதுகாப்பு அங்கி இல்லாமல் கடலில் மூழ்கியவா்கள் உயிா் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும், மிதக்கும் பொருள்களைப் பற்றிக்கொண்டு யாராவது தப்பியிருக்கிறாா்களா என்று தேடி வருகிறோம் என்றாா் அவா்.

மியான்மரில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான ரோஹிங்கயாக்கள், அண்டை நாடான வங்கதேசத்திலும், மலேசியா போன்ற பிற நாடுகளிலும் தஞ்சமடைந்துவருகின்றனா். வங்கதேசத்தில் மட்டும் 13 லட்சம் ரோஹிங்கயா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், மலேசியாவை நோக்கி இரு வாரங்களுக்கு முன்னா் படகில் புறப்பட்ட நூற்றுக்கணக்கானவா்கள், வேறு இரு படகுகளுக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டதாகவும், சிறிய படகில் சுமாா் 70 பேரும் மற்றொரு படகில் 230 பேரும் இருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அதில் சிறிய படகு அந்தமான் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த 21 பேரது உடல்கள்தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன. 230 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

SCROLL FOR NEXT