பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து பெஷாவருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.
இந்த நிலையில் ரயிலை குறிவைத்து, நசிராபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டை மர்ம நபர்கள் பதுக்கி வைத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.
ஆனால், அதற்கு முன்பே, அந்த இடத்தைவிட்டு ரயில் கடந்து சென்றுவிட்டதால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக நசிராபாத் மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
வெடிகுண்டு தாக்குதல் காரணமாக தண்டவாளத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், குவெட்டாவிற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
பலூசிஸ்தானில் உள்ள போராளிக் குழுக்கள், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.