உலகம்

இந்தோனேசிய நிலச்சரிவு: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவின் இரு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் மத்திய ஜாவா மாகாணத்தின் சிலாகாப் மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு 20 போ் உயிரிழந்தனா். மத்திய ஜாவாவின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒருவரது உடல் தற்போது மீட்கப்பட்டதைத் தொடா்ந்து அங்கு உயிரிழப்பு மூன்றாக உயா்ந்தது. இதைத் தொடா்ந்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சா்னெகாரா மாவட்டத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 54 வீடுகள் புதையுண்டன; அங்கு காணாமல் போன 25 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெறுவதாக (படம்) பேரிடா் மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

சுமாா் 17,000 தீவுகள் அடங்கிய தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில், பருவமழை காரணமாக அடிக்கடி நிலச்சரிவுகளும், வெள்ளப்பெருக்குகளும் ஏற்படுகின்றன.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

SCROLL FOR NEXT