உலகம்

வியத்நாம் வெள்ளம்: உயிரிழப்பு 90-ஆக அதிகரிப்பு

வியத்நாமின் மத்திய பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெரு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரிப்பு

தினமணி செய்திச் சேவை

வியத்நாமின் மத்திய பகுதியில் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெரு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 90-ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

கால்மேகி புயல் மற்றும் கனமழையால் வியத்நாம் பலத்த சேதத்தை சந்தித்து வருகிறது. அந்நாட்டின் மத்தியப் பகுதியில் மழை வெள்ளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியுள்ளன. ஐந்து லட்சம் குடும்பங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை மற்றும் நிலச்சரிவை வியத்நாம் சந்தித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா். அந்நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோா் ஆபத்தான பகுதிகளில் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT