ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
இத்துடன், இந்த விபத்தில் மாயமான 280 பேரைத் தேடும் பணிகளில் ஹாங்காங் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாங்காங்கின், தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், நேற்று (நவ. 26) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது அருகிலிருந்த கட்டடங்களுக்கும் பரவியதால் தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஹாங்காங் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தீயணைப்பு வானங்களின் உதவியுடன் வீரர்கள் அந்தக் கட்டடத்தில் பரவிய தீயை அணைக்க 2 ஆவது நாளான இன்றும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 70 ஆண்டுகளில் ஹாங்காங் நகரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரிடர் எனக் குறிப்பிடப்படும் இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
இத்துடன், 76 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 15 பேர் கவலைக்கிடமாகவும், 28 பேர் கடுமையான காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, தீ பரவிய தலா 32 தளங்களைக் கொண்ட 7 கட்டடங்களில் வசித்தவர்களில் 280 பேர் மாயமாகியுள்ளதால், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.