அமெரிக்காவில் குடும்ப விழாவில் துப்பாக்கிச்சூடு AP
உலகம்

அமெரிக்காவில் குடும்ப விழாவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

கலிஃபோர்னியாவில் குடும்ப விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குடும்ப விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.

ஸ்டாக்டன் பகுதியில் உள்ளதொரு அரங்கில் சனிக்கிழமை(நவ. 29) மாலை நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அதில் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த குழந்தைகள், பெரியவர்கள் உள்பட மொத்தம் 4 பேர் பலியாகினர். காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு மாயமான நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த நபரது அடையாளங்களை வெளியிட்டுள்ள அதிகாரிகள், அவரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். துப்பு கிடைத்தால் உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர். விசாரணை தொடருகிறது.

4 dead, 10 wounded in shooting at banquet hall in Stockton, California

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT