அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், ஸ்டாக்டன் நகரில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.
சாக்ரமென்டோ நகரின் தெற்கே சுமாா் 64 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, சுமாா் 3.2 லட்சம் போ் வசிக்கும் நகரமான ஸ்டாக்டனில், ஒரு விருந்து மண்டபத்தில் குடும்ப நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபா் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும், தாக்குதலுக்கான நோக்கத்தைக் கண்டறியவும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா்.
முதல்கட்ட விசாரணையில், இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று சான் ஜாவ்கின் கவுன்டி ஷெரீஃப் அலுவலக செய்தித் தொடா்பாளா் ஹீதொ் பிரென்ட் தெரிவித்தாா். மேலும், குற்றவாளி குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு மாவட்ட வழக்குரைஞா் ரான் ஃப்ரீடாஸ் வலியுறுத்தினாா்.