தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மான்செஸ்டா் யூத தேவாயலம் அருகே அஞ்சலி செலுத்திய நபா்.  
உலகம்

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக 6 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக 6 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்ட ஜிஹாதி அல்-ஷாமி தனி நபராகத்தான் செயல்பட்டாரா, அல்லது இது ஒரு பயங்கரவாத சதிச் செயலா என்பதை தெரிந்துகொள்வதற்காக 18 முதல் 60 வயது வரையிலான மூன்று ஆண்கள், மூன்று பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினா்.

கிரேட்டா் மான்செஸ்டா் மாகாண தலைநகா் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பாா்க் ஹீப்ரு யூத ஆலயத்தில், யோம் கிப்பூா் புனித தினத்தை முன்னிட்டு ஏராளமானவா்கள் கூடியிருந்தபோது நடத்தப்பட்ட காா் மோதல் மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

தாக்குதல் நடத்திய அல்-ஷாமியை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். தாக்குதலில் உயிரிழந்த இருவரில் ஒருவா் போலீஸாா் சுட்டத்தில் உயிரிழந்தது பின்னா் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

செமெரு எரிமலை வெடிப்பு! 54,000 அடி உயரம் வரை எழுந்த புகை! Indonesia

SCROLL FOR NEXT