உலகம்

இஸ்ரேலுடனான போா்: ஈரானில் 6 பேருக்குத் தூக்கு!

இஸ்ரேலின் சாா்பாக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 6 பேருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேலின் சாா்பாக தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 6 பேருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரைத் தொடா்ந்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களுக்கு எதிராக செயல்பட்டவா்களை சட்டத்தின்முன் நிறுத்துவதாக ஈரான் உறுதியளித்தது.

ஆனால், இஸ்ரேல் தொடா்பான வழக்குகளில் கட்டாய வாக்குமூலங்களைப் பெறுவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் விசாரணைகளை நடத்துவதாகவும் ஈரான் மீது மனித உரிமை ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இந்தச் சூழலில், குஸிஸ்தான் மாகாணத்தில் இஸ்ரேலுக்காக காவலா்கள், பாதுகாப்பு படையினரைக் கொன்றதாகவும், குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டதாகவும் கூறி 6 பேருக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தவிர, 2009-ல் குா்திஸ்தான் மாகாணத்தில் சன்னி மதகுரு ஒருவரைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு கைதியும் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.

முன்னதாக, 2025-ல் மட்டும் ஈரானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தூக்கிலிடப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறியது நினைவுகூரத்தக்கது...படவரி.. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனா்களுக்கு சுற்றுலா விசா வசதி: இந்தியா விரிவாக்கம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் ஓய்வு

பிகாா்: நிதீஷிடம் இருந்து சாம்ராட் செளதரி வசமானது உள்துறை; புதிய அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!

காங்கிரஸின் தீய அரசியலை மக்கள் நிராகரிப்பது தொடா்கிறது: மத்திய அமைச்சா் பிரதான்

காா் மீது பேருந்து மோதல்: வட்டாட்சியா்கள் உள்பட 5 போ் காயம்

SCROLL FOR NEXT