நெதன்யாகுவுடன் டிரம்ப் x
உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்தது: டிரம்ப்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் கையழுத்தாகவுள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப், எகிப்து அதிபா் அப்தல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் கலந்து கொள்கிறாா்.

இதற்காக டிரம்ப் சில மணி நேரங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் வந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோர் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து நெதன்யாகுவுடன் ஒரே வாகனத்தில் டிரம்ப் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்குச் சென்றார்.

அங்கு அமர்ந்திருந்த பலரும் 'டிரம்ப் அமைதியின் தலைவர்' என்று எழுதப்பட்டிருந்த தொப்பிகளை அணிந்திருந்தனர்.

அதற்கு முன்னதாக இஸ்ரேல் பத்திரிகையாளர்கள், டிரம்ப்பிடம் ' 'ஹமாஸுடனான இஸ்ரேலின் போர் அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டதா?' என்று கேட்டதற்கு, அவர் வெறுமனே, 'ஆம்' என்று பதிலளித்தார்.

போர் நிறுத்தம் கையெழுத்தாகவுள்ளதையடுத்து ஹமாஸ் வசம் உள்ள 7 இஸ்ரேல் பிணைக் கைதிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் மீதமுள்ள 13 பிணைக் கைதிகளும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காஸாவில் போர் முடிந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்தை ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹாசெம் காசெம் வரவேற்றுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மத்தியஸ்தர்களையும் சர்வதேச நாடுகளையும் வலியுறுத்தியுள்ளார்.

Trump again says Israel’s war with Hamas is over

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழிகளின் பார்வையில்... திவ்யபாரதி!

டெல் அவிவ் கடற்கரையில் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல்!

சீனா மீது கூடுதலாக 100% வரி எதிரொலி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

பாடவா உன் பாடலை... ஆம்னா ஷரீப்!

பிக் பாஸ் 9: எல்லோரும் வெளியேற்ற விரும்பிய ஒரு நபர்! யார் தெரியுமா?

SCROLL FOR NEXT